நாட்டில் தற்போது இறைத் தேடல்கள் அதிகரித்து வருகின்றன. அமைதியை தேடி கோயில்களுக்கு செல்வோரின் எண்ணிக்கையை தற்போது குறைத்து மதிப்பிட முடியாது. இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில், கோயிலுக்கு செல்வோரால் மனதை ஒருநிலைப் படுத்தி அமைதியை எட்ட முடியுமா என்றால், இல்லை என்றுதான் கூறமுடியும். ஆத்மாதான் இறைவன் என்பதை அறிய மறுப்பதே இதற்கு காரணம் எனலாம். நம்மை நாமே உணர்வதே இறை நிலை. வெளியே ஏன் தேட வேண்டும். மகான்களும் மனதை ஒருமுகப்படுத்த பல்வேறு வழிமுறைகளை போதித்துள்ளனர். அவர்களது வழிகாட்டுதல்களை எழுத்து வடிவில் படித்து சிலாகிக்கும் நாம், அவற்றை பின்பற்ற எத்தனிக்கும்போது கசந்து விடுகிறது. தந்த்ரா, யந்த்ரா. மந்த்ரா என்று வழிபாடு வகைப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை விடுத்து நம்மை நாம் உணரும்போது, மனதிற்குள் எழும் தவறான எண்ணங்களை எளிதாக புறந்தள்ளலாம். அவ்வாறு செய்யும் போது நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியே. உதாரணத்திற்கு ஒன்றை பார்ப்போம். தத்துவ ஞானி ஒருவரிடம், அவரது சீடரைப் பற்றி புகார் கூற வந்தார் ஒருவர். அவ்வாறு வந்தவரிடம் ஞானி 3 கேள்விகளை கேட்டாராம். முதல் கேள்வி சீடர் செய்த தவறை நீங்கள் நேரில் பார்த்தீர்களா, இரண்டாவது, சீடரைப் பற்றிய புகார் நல்லதா, கெட்டதா மூன்றாவது, இதனால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்குமா, துன்பம் அடைவேனா. இதற்கு வந்தவர் என்ன பதில் சொல்லியிருப்பார். இதன் மூலம் நாம் என்ன உணர முடிகிறது. தவறான செய்திகள், தேவையில்லாத தகவல்கள் போன்றவற்றை தவிர்த்தலே, ஆத்மாவை உணர்வதற்கு முதல் படி......
தொடர்ந்து ஆத்மாவை தேடுவோம்...
கோ